‘லால் சலாம்’ படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் ‘தேர் திருவிழா’ வெளியானது..!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் ‘லால் சலாம்’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘தேர் திருவிழா’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையில் ஷங்கர் மஹாதேவன், ஏஆர் ரொஹைனா, தீப்தி சுரேஷ், யோகி சேகர் உள்ளிட்ட பலர் இணைந்து பாடியுள்ளனர். கிராமத்தில் தத்ரூபமாக செட் அமைத்து திருவிழா போல் செட்டப் செய்து இந்த பாடலை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார் மதுரை சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

'லால் சலாம்' படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் 'தேர் திருவிழா' வெளியானது..! 1

விளம்பரம்

விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோரை வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி முடித்துள்ள திரைப்படம் தான் ‘லால் சலாம்’ இந்த படத்தில் ரஜினிகாந்த், கபில் தேவ் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கின்றனர். லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் மியூசிக் அமைத்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை பிரவீன் பாஸ்கரும் ஒளிப்பதிவு பணிகளை விஷ்ணு ரங்கசாமியும் கவனித்துள்ளனர்.

தொடர்புடையவை  முகம் உதடு எல்லாம் வீங்கி போய் விகாரமாக மாறிய ஸ்ருதி ஹாசன்.! என்னாச்சு அவருக்கு?

'லால் சலாம்' படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் 'தேர் திருவிழா' வெளியானது..! 3

விளம்பரம்

தற்போது படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு படத்தின் டீசர் வெளியான நிலையில் தற்போது படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. ‘தேர்த்திருவிழா’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வீடியோவை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the below video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Sony Music South

விளம்பரம்

Leave a Comment