பிக்பாஸ் சீசன் 7ன் இன்றைக்கான ப்ரோமோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. அதில் தற்போது ரவீனா வீட்டிலிருந்து அவரது பெற்றோர்கள் யாரும் வரவில்லை. ரவீனாவின் தம்பியும், மற்றொரு உறவுக்கார பெண்மணி மட்டுமே உள்ளே வந்திருக்கின்றனர். உள்ளே வந்த வேகத்தில் அவர்கள் ரவீனாவை லெஃப்ட், ரைட் வாங்கியிருக்கின்றனர். மணியுடன் பேசிக் கொண்டிருக்கும் ரவீனாவை மிகவும் கடிந்து கொண்டுள்ளார். “உள்ளே வந்த வேகத்தில் உன்னை அறைந்திருப்பேன், அவ்வளவு கோபத்தில் வந்தேன்” என்று அவர் கூறுகிறார். இதனால் ரவீனா என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். மேலும் அவர் மணியிடம் சென்று, “இனி இந்த பெண்ணை கூப்பிட்டு அருகில் அமர வைத்து பேசக்கூடாது” என்றும் உத்தரவு போடுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட மணி மற்றும் ரவீனா இருவரும் தங்களது தனித்திறமையை காட்டாமல் குழுவாக சேர்ந்து ஆடி வந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர்கள் இருவரும் தனித்தனியாக விளையாட வேண்டும் என்று சொல்லி ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் நடக்கும் ஃப்ரீஸ் டாஸ்க்கில் குடும்பத்தினர் உள்ளே வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ரவீனாவின் தாயார் உள்ளே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரவீனாவின் தம்பி மற்றும் சொந்தக்கார பெண் இருவர் மட்டுமே உள்ளே வந்துள்ளனர். அவர் வந்த வேகத்தில் ரவீனாவைப் பார்த்து, “நீ செய்த வேலைக்கு உன்னை அறையனும் போலிருக்கிறது”

“அம்மா எங்கே உனக்கு ஓகே சொன்னார்? நீ எல்லா இடத்திலும் போய் அதையே சொல்லிக் கொண்டிருக்கிறாய்” என்று கடிந்து கொள்கிறார். பின்னர் மணியிடம் சென்ற அவர், “இனி இந்த பெண்ணை அருகில் அமர் கூப்பிட்டு கூப்பிட்டு உட்கார வைத்து பேசிக்கொண்டிருக்கக் கூடாது” என்று அறிவுரையும் வழங்குகிறார். இதனால் மணி – ரவீனா காதலுக்கு ரவீனா வீட்டில் கடும் எதிர்ப்பு இருப்பது உறுதியாக இருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television