‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் முதல் முறையாக அமிர்தாவில் முன்னாள் கணவர் கணேஷை எழில் சந்திக்கிறார். இருவருக்குள்ளும் முதல் முறையாக தற்போது அறிமுகம் ஏற்படுகிறது. அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. கணேஷின் மனைவியாக இருந்தவர் அமிர்தா. இவருக்கு நிலா என்கிற பெண் குழந்தையும் இருக்கிறது. இந்த நிலையில் விபத்து ஒன்றில் கணேஷ் காலமாகிவிட்டதாக அமிர்தா தனது மாமனார் மாமியாருடன் தனியாக வசித்து வருகிறார். அப்போது அவருக்கு எழிலுடன் நட்பு ஏற்படுகிறது. பின்னர் அது காதலாக மாறி எழிலையே அமிர்தா திருமணம் செய்து கொள்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்ட கணேஷ் மீண்டும் உயிருடன் வருகிறார். அவர் அமிர்தாவை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அமிர்தாவிற்கு இரண்டாவதாக திருமணம் ஆகிவிட்டது என்கிற உண்மை அவருக்கு தெரிகிறது. எனவே அவர் எழிலின் அம்மாவான பாக்யாவிடம் சென்று தனது மனைவி மற்றும் குழந்தைகளை மீட்டு தருமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் பாக்யா இந்த விஷயத்தில் என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருந்த சூழலில் தற்போது கோவிலுக்கு வரும் அமிர்தாவை கணேஷ் நேரில் சந்திக்கிறார்.

இறந்துவிட்டதாக நினைத்த கணேஷ் உயிருடன் வந்து நிற்பதை பார்த்த அதிர்ச்சியில் அமிர்தா மயக்கமடைந்து விழுகிறார். அவரை எழில் எழுப்பிக் கொண்டிருந்த நிலையில், கணேஷ் எழிலின் கையை பிடித்து முறைக்கிறார். கணேஷின் வருகையை சற்றும் எதிர்பார்க்காத எழிலும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television