விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள்? ஒரு வெளியேற்றமா? அல்லது இரட்டை வெளியேற்றமா? என்கிற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் தற்போது வாக்கெடுப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மக்களின் மனங்களை கடந்த ஏழு ஆண்டுகளாக பிரதிபலித்து வரும் நமது இணையதளத்தில் எடுக்கப்படும் அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பு முடிவுகளில் இரண்டு நாட்கள் முடிவின் முன்னிலை விவரம் தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் ஆண் போட்டியாளர் ஒருவரும், பெண் போட்டியாளர் ஒருவரும் தொடர்ந்து பின்தங்கி இருக்கும் நிலையில் இந்த வாரம் இவர்கள் இருவரும் தான் வெளியேறப் போகிறார்களா? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி 86 நாட்களை நிறைவு செய்து விட்டது. இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்க முடியாத அளவிற்கு விறுவிறுப்பாக இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது. தற்போது இந்த சீசனில் 13 போட்டியாளர்கள் வெளியேறிவிட, மீதம் 10 போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர். இதில் இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷனில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பேர் மட்டுமே நாமினேஷனில் சிக்கி இருக்கின்றன. இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடந்த நிலையில் மாயா, நிக்ஸன், தினேஷ், விஷ்ணு, மணி ரவீனா, விஜய் வர்மா என மொத்தம் ஏழு போட்டியாளர்கள் மாட்டியிருந்தனர்.

இதில் மாயா மற்றும் நிக்சன் இருவரும் மிகக் குறைந்த வாக்குகளையே பெற்று வருகின்றனர். நமது இணையதளத்தில் எடுக்கப்படும் அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பு எப்பொழுதும் மக்களின் மனங்களை பிரதிபலிப்பதாக, கடந்த சில ஆண்டுகளாக முடிவுகளை வெளியிட்டு வருகிறோம். 99 சதவீதம் நம் இணையதள வாக்கெடுப்பு முடிவுகள் துல்லியமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் நிக்சன் மற்றும் மாயா இருவரும் தொடர்ந்து கடைசி இரண்டு இடத்தை பிடித்திருக்கின்றனர் வாக்கெடுப்பு தொடங்கிய நாள் முதலே இவர்கள் இருவருமே பின்தங்கியே காணப்படுகின்றனர்.

எனவே இந்த வாரம் இரட்டை வெளியேற்றம் இருக்கும் பட்சத்தில் இவர்கள் இருவரும் வெளியேறுவார்களா? அல்லது வார இறுதிக்கு இன்னமும் மூன்று நாட்கள் இருப்பதால் இந்த முடிவுகளில் ஏதேனும் மாற்றம் இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நீங்களும் நமது இணையதளத்தில் எடுக்கப்படும் அதிகாரபூர்வமற்ற வாக்கெடுப்பில் பங்குபெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன் படுத்தி வாக்களிக்கவும் https://tamilglitz.in/bigg-boss-tamil-vote/