‘அயலான்’ இசை வெளியீட்டு விழாவின் வீடியோக்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் சிவகார்த்திகேயனின் மகன் குகன் மேடை ஏறி மைக்கில் கியூட்டாக பேசும் வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழில் முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். ‘மெரினா’ என்கிற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமான இவர் தற்போது 23 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். மேலும் ‘டான்’, ‘டாக்டர்’ போன்ற நூறு கோடி வசூல் படங்களையும் இவர் தமிழ் திரையுலகத்திற்கு கொடுத்து ரசிகர்கள் மனதில் டாப் ஹீரோவாக இடம் பிடித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சிவகார்த்திகேயன் ‘அயலான்’ என்கிற திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை இயக்குனர் ஆர். ரவிக்குமார் இயக்க, கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஜெ ராஜேஷ் தயாரித்திருக்கிறார். வருகிற பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் ஆடியோ லாஞ்ச் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனா, மகன் குகன் ஆகியோருடன் கலந்து கொண்டார். ரசிகர்கள் குகனை மேடையில் ஏற்றுமாறு கோரிக்கை விடுத்த நிலையில் மேடைக்கு தனது மகனை அழைத்து வந்து மைக்கில் பேச வைத்தார் சிவகார்த்திகேயன்.
View this post on Instagram
அப்போது குகனிடம் ஹாய் சொல்லுமாறும், ஐ லவ் யூ சொல்லுமாறு சிவகார்த்திகேயன் கூற, குகனும் அதை அப்படியே திருப்பி கூறுகிறார். பின்னர் இது யார் நடித்த படம்.? இந்த படத்தின் பெயர் என்ன? என்று கேட்க ‘அயலான்’ என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார் குகன். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV