“லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும்” உயர்நீதிமன்றத்தில் மனு.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் ஒருவர் மனு ஒன்றை தொடுத்து இருக்கிறார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்திருக்கிறது. தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். முதன்முதலாக ‘மாநகரம்’ என்கிற வெற்றிப் படத்தை இயக்கியதன் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் இவர் இயக்கிய ‘மாஸ்டர்’, ‘கைதி’, ‘விக்ரம்’ ஆகிய அனைத்து படங்களும் வெற்றி படங்களாக அமைந்திருந்தது. இந்த நிலையில் அவர் கடைசியாக இயக்கிய ‘லியோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களிலேயே பெற்றிருந்த போதிலும் வசூலை வாரிக் கொடுத்திருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும்" உயர்நீதிமன்றத்தில் மனு.! 1
தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் படங்களில் வன்முறைகள் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், தற்போது மதுரையைச் சேர்ந்த ராஜா முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றை தொடுத்திருக்கிறார். அதில் விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படத்தில் சட்டவிரோதமான செயல்கள், கலவரம், கார் மற்றும் வாகனங்களை அதி வேகமாக இயக்குவது, காவல்துறை உதவியுடன் பல குற்றங்களை செய்வது போன்ற வன்முறை காட்சிகள் மிகுதியாக இருந்ததாக கூறியிருக்கிறார். மேலும் இதுபோன்ற சமூகத்திற்கு தவறான வழிகாட்டுதல்களை தூண்டும் படங்களை தணிக்கை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு முறையாக உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் அதில் கூறி இருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  "நீ வெறும் 3 தான், நான்லாம் 13-14 பேர்"!!ஷகீலா முன்பு பஜ்சாவாகி போன வனிதா விஜயகுமார்.

"லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும்" உயர்நீதிமன்றத்தில் மனு.! 3
மேலும் வன்முறை தூண்டும் வகையில் காட்சிகளை படமாக்கியதற்கு அவர் மீது சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். ‘லியோ’ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்ற காரணத்தால் வழக்கு விசாரணையை மறு தேதிக்கு தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.! அந்த செய்தியை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: News Tamil 24×7

விளம்பரம்

Leave a Comment