ஆந்திர முதலமைச்சராக இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு ‘யாத்திரா 2’ என்கிற தலைப்பில் படமாகிறது. இந்த படத்தில் ஜெகன்மோகன் ரெட்டியாக நடிகர் ஜீவா நடித்திருக்கிறார். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. ஆந்திராவின் அசைக்க முடியாத சக்தியாக இருப்பவர்தான் ஜெகன்மோகன் ரெட்டி. இவரது தந்தை ராஜசேகர ரெட்டி ஏற்கனவே ஆந்திராவின் முதலமைச்சராக இருந்தவர். விமான விபத்து ஒன்றில் ராஜசேகர ரெட்டி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். அதன் பின்னர் அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என்று தனது தந்தை பெயரில் கட்சியை தொடங்கி தற்போது ஆந்திராவின் இளம் முதலமைச்சராக வலம் வந்து கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறை படமாக்க வேண்டும் என்று அவரது தொண்டர்கள் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், தற்போது அதை படமாக்கி இருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய மொழிகளில் இந்த படம் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ஜெகன்மோகன் ரெட்டியாக நடிகர் ஜீவாவும், அவரது தந்தை ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் மம்முட்டியும் நடித்திருக்கின்றனர் ஏற்கனவே ‘யாத்ரா’ என்கிற படத்தில் மம்மூட்டி ராஜசேகர ரெட்டியின் பயோபிக்கில் நடித்திருந்தார். தற்போது ‘யாத்ரா 2’ என்று ஜெகன்மோகன் ரெட்டியின் வரலாற்றை தற்போது பயோபிக்காக எடுத்திருக்கின்றனர். இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தப் படத்தை மஹி வீ ராகவ் என்பவர் எழுதி இயக்கிருக்கிறார். சிவா மேகா என்பவர் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். ‘த்ரீ ஆட்டம் லீவ்ஸ்’ மற்றும் ‘வி செல்லுலாய்ட்’ ஆகிய இரண்டு நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து இருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். நீங்களும் அந்த ட்ரெய்லர் வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Three Autumn Leaves