விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் இத்தனை நாட்களாக நாம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிகழ்வு நடந்துள்ளது. மனோஜ் தற்போது முத்துவிடம் வசமாக சிக்கி இருக்கிறார். மனோஜ் வெட்டியாக இருப்பதை முத்து தனது மொபைலில் போட்டோ எடுத்துக் கொள்கிறார். இதனால் விரைவில் மனோஜ் வீட்டில் மாட்டிக்கொண்டு அவரது உண்மை முகம் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலையின் மூத்த மகனாக இருக்கும் மனோஜ் வேலை வெட்டிக்கும் எதுவும் செல்லாமல் தினமும் பார்க்கில் அமர்ந்து பொழுதை கழித்து வருகிறார். ஆனால் தனது மனைவியிடமும், வீட்டிலும் தான் மிகப்பெரிய கார் ஷோரூமில் வேலை செய்வதாக காட்டிக் கொள்கிறார். இந்த உண்மை இத்தனை நாட்களாக வீட்டில் இருக்கும் யாருக்கும் தெரியாது. ஆனால் மனோஜியின் தாயார் விஜயாவுக்கு மட்டும் இந்த உண்மை தெரியும். இந்த நிலையில் டாக்ஸி ஓட்டுநராக இருக்கும் மனோஜின் தம்பி முத்து, ஒருவரை காரில் இறக்கி விடுவதற்காக அவர் மனோஜ் இருக்கும் பூங்காவிற்கு வருகிறார்.

அந்த சமயம் பார்த்து மனோஜ் அங்கு அமர்ந்து கொண்டு கடலை தின்று கொண்டிருக்கிறார். இதை பார்க்கும் முத்து அதை தனது ஃபோனில் வீடியோவாக எடுத்துக் கொள்கிறார். இதனால் மனோஜ் விரைவில் வீட்டில் மாட்டிக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television