ஆலியாவுக்காக பார்த்து பார்த்து சஞ்சீவ் கட்டி வரும் மாளிகை.! வீட்டின் ஹோம் டூர் வீடியோ உள்ளே.!

ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் இணைந்து கட்டி வரும் வீட்டின் ஹோம் டூர் வீடியோவை தற்ப்போது அவர்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். விரைவில் வீடு கட்டி முடிக்கப்பட்டு முழு வீட்டை சுற்றி காண்பித்து வீடியோ வெளியிடப்படும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியலின் மூலமாக அறிமுகமானவர்கள் தான் ஆல்யா மற்றும் சஞ்சீவ். இந்த நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது சஞ்சீவுக்கும், ஆல்யாவிற்கும் காதல் மலர்ந்தது. ஆல்யா ஏற்கனவே இன்னொருவரை காதலித்து வந்த நிலையில், அவருடன் காதல் முறிவு ஏற்பட்டு சஞ்சீவை காதலிக்கத் தொடங்கினார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ஆலியாவுக்காக பார்த்து பார்த்து சஞ்சீவ் கட்டி வரும் மாளிகை.! வீட்டின் ஹோம் டூர் வீடியோ உள்ளே.! 1

விளம்பரம்

பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஐலா என்ற மகளும், அர்ஷ் என்ற மகனும் உள்ளனர். ஆலியா இரண்டாவது முறையாக ராஜா ராணி 2 என்ற சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இரண்டாவது பிரசவத்தின் காரணமாக அவர் அந்த நாடகத்தை விட்டு விலகி விட்டார். சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பான கயல் சீரியலில் கயலுக்கு ஜோடியாக ஹீரோவாக நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒரு youtube சேனலை தொடங்கி அதில் வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர். குறிப்பாக அவர்களது மூத்த மகள் ஐலா செய்யும் குறும்புகளை அவர்கள் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடையவை  சரஸ்வதியை குழந்தை இல்லை என்று அசிங்கபடுத்திய வசுவின் தாய்.. ஆனா அங்க ஒரு ட்விஸ்ட்

ஆலியாவுக்காக பார்த்து பார்த்து சஞ்சீவ் கட்டி வரும் மாளிகை.! வீட்டின் ஹோம் டூர் வீடியோ உள்ளே.! 3

விளம்பரம்

மேலும் டூர் செல்வது, vlogs வீடியோக்கள், அவர்கள் வீட்டில் செய்யும் சின்ன சின்ன குறும்புகள் போன்றவற்றையும் வீடியோக்களாக பதிவேற்றி வருகின்றனர். இந்த வீடியோக்களை பல லட்சம் மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். இந்த நிலையில் தனது ஆசை மனைவி ஆல்யா மற்றும் தனது குழந்தைகள் ஐலா மற்றும் அர்ஷ்க்காக சஞ்சீவ் மிகப்பெரிய வீடு ஒன்றை கட்டி வருகிறார் சஞ்சீவ். லிப்ட், மாடுலர் கிட்சன் என உருவாகி வரும் அந்த வீடு முடியும் தருவாயில் உள்ளது. வீட்டை சுற்றி காண்பித்து வீடியோ ஒன்றை சஞ்சீவ் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the below video..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Sanjiv and Alya

விளம்பரம்

Leave a Comment