பெயருக்கு சாரி கேட்ட நிக்சன்..! நிக்சனை வெளுத்து வாங்கிய வினுஷா..! ப்ரோமோ உள்ளே.!

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி தற்போது இறுதி கட்டங்களை நெருங்கி இருக்கிறது. இந்த நிலையில் 103வது நாளுக்கான ப்ரோமோக்கள் இன்று வெளியாகி இருக்கிறது. தன் உடலமைப்பு குறித்து மோசமாக பேசிய நிக்சனை வினுஷா வெளுத்து வாங்குகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7ன் இந்த வார இறுதியுடன் நிறைவடைய இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரம் ஃபினாலே என்பதால் எலிமினேட் ஆகி சென்ற போட்டியாளர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருகை தந்து கொண்டிருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பெயருக்கு சாரி கேட்ட நிக்சன்..! நிக்சனை வெளுத்து வாங்கிய வினுஷா..! ப்ரோமோ உள்ளே.! 1

விளம்பரம்

அந்த வகையில் எலிமினேட் ஆகி சென்ற போட்டியாளராக இருக்கும் வினிஷா தற்போது நிக்சனை கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் பேசும் பொழுது, தன்னுடைய உடல் அமைப்பு குறித்து நீ கேலி செய்துவிட்டு பின்பு பிளாஸ்மா முன்பு நின்று ஒரு விளக்கம் கொடுத்தாயே?? அது நன்றாக இருந்ததா?? என கேட்கிறார். அதற்கு பதில் அளிக்கும் நிக்சன், “நான் ஐஸுவிடம் அது குறித்து பேசும் பொழுது எனக்கு அது தவறாகவே தெரியவில்லை. ஆனால் வெளியில் அது மிக தவறாக போய்க் கொண்டிருப்பது எனக்கு தெரிந்தது, அதற்காக நான் மிகவும் வருத்தம் தெரிவிக்கிறேன், சாரி” என பதிலளிக்கிறார்.

தொடர்புடையவை  போட்டு கொடுத்த அபி.. தாமரையை திட்டி தீர்த்த பாலா | BB Ultimate Mar03 Promo1

பெயருக்கு சாரி கேட்ட நிக்சன்..! நிக்சனை வெளுத்து வாங்கிய வினுஷா..! ப்ரோமோ உள்ளே.! 3
ஆனால் அதற்கு பதில் அளிக்கும் வினுஷா, நீ பேசியது வெளியில் தவறாக போயிருக்கிறது அதனால் என்னை அது பாதித்திருக்கிறது என தெரிந்து கொண்டு நீ கேட்கும் சாரி எனக்கு தேவை இல்லை” என்று கூறுகிறார். ஆனால் அதை புரிந்து கொள்ளாத நிக்சன், “மறுபடி மறுபடியும் நீங்கள் இதை ரெஜிஸ்டர் செய்து கொண்டிருக்கிறீர்கள்” என்று திமிராக பதிலளிக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்…! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment