பிக்பாஸ் ரட்சிதா தற்போது விசித்ரா குறித்து பதிவிட்டு இருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தினேஷிற்கு இனி வாய்ப்பே இல்லை. அவர் பெங்களூருக்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை என்று கூறி வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் மூலமாக பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி பல ஆண்டுகளுக்கு பின்னர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பிரிந்து விட்ட தகவலை ரட்சிதா கடந்த பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்ட பின்னர் தான் அனைவருக்கும் தெரிய வந்தது.

“தினேஷால் தான் மிகவும் கொடுமைகளை அனுபவித்து வந்தேன். அது யாருக்கும் தெரியாது. ஆனால் அனைவரும் என் மீது மட்டுமே குற்றம் சாட்டுகின்றனர்” என்கிற ரீதியில் தொடர்ந்து சமூக வளைத்தளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் ரட்சிதா. இந்த நிலையில் தினேஷ் பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்டிருக்கிறார். “இந்த சீசனில் ஒரு வேளை தான் வெற்றி பெற்றால், நேராக பெங்களூருக்கு சென்று அந்த கோப்பையை தனது மனைவியிடம் வழங்கி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவேன்” என்று தினேஷ் பேசி வருகிறார். ஆனால் வெளியில் நிலைமை வேறு விதமாக இருக்கிறது. ரட்சிதா தொடர்ந்து தினேஷிற்கு எதிராகவே கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் இன்று வெளியிட்டு இருக்கும் பதிவில் விசித்ராவை ஆதரித்து பேசியிருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது தினேஷ் தொடர்ந்து விசித்ராவை தாக்கி பேசி வந்தார். விசித்ராவிற்கும் தினேஷுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வந்தது. அதை அப்போதே மேற்கோள் காட்டி வந்த ரட்சிதா, “இது போலத்தான் நன் தினமும் வேதனைகளை அனுபவித்து வந்தேன்” என்று மறைமுகமாக சில புத்தக மேற்கோள்களை காட்டி பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் அவர் விசித்ரா குறித்து இன்று பதிவிட்டு இருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் அவர் விசித்ராவின் புகைப்படத்தை பகிர்ந்து, “இதயங்களை வெல்வது தான் உண்மையான வெற்றி, எனவே எனது இதயத்தை எடுத்துக் கொள்ளுங்கள், எனது இதயத்தை மட்டுமல்ல என்னுடைய ஆன்மாவையும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று விசித்ராவை டேக் செய்து அந்த பதிவை பதிவிட்டு இருக்கிறார். இந்தப் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த நெட்டிசன்கள் பலரும், “தினேஷ் நீங்கள் பெங்களூருக்கு செல்ல தேவையில்லை. இனிமே ரட்சிதா உங்களுடன் இணைய வாய்ப்பே இல்லை. எனவே வெளியில் வந்தவுடன் மனதை தேற்றிக் கொள்ளுங்கள்” என்று ரீதியில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.