நடனத்தை பாதியிலேயே நிறுத்திய அமீர் பாவனி..கடுப்பான ரம்யா…கண்ணீர் விட்டு அழும் பாவனி..என்ன ஆச்சு ரெண்டு பேருக்கும்

விஜய் டிவியில் இரவு 10 மணி ஆனாலே ஒலிக்க தொடங்கும் ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் பிக்பாஸ் தான். அந்த அளவிற்கு தமிழக மக்களிடையே பிரபலமான ஷோ. இது ஐந்து சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. தற்போது 6வது சீசன் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 சீசன்களையும் உலக நாயகன் கமலே தொகுத்து வழங்கி வந்தார். 6வது சீசனையும் அவரே தொகுத்து வழங்குவார் என தெரிகிறது. இந்த சீசன் 5ல் கலந்து கொண்ட போட்டியாளர்கள்தான் அமிர் மற்றும் பாவனி. பாவனியை அமிர் காதலிப்பதாக கூறி பிக்பாஸ் வீட்டில் நாட்களை கடத்தி வந்தார். பின்னர் பிக்பாஸிலிருந்து வெளியேறிய பின்னரும் இருவரின் நட்பு தொடர்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடனத்தை பாதியிலேயே நிறுத்திய அமீர் பாவனி..கடுப்பான ரம்யா...கண்ணீர் விட்டு அழும் பாவனி..என்ன ஆச்சு ரெண்டு பேருக்கும் 1

விளம்பரம்

தற்போது இவர்கள் இருவரும் இணைந்து பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் பங்கெடுத்து வருகின்றனர். நடன கலைஞரான அமீர் பாவனிக்கு நடனம் சொல்லிக் கொடுத்து இருவரும் நடனத்தில் கலக்கி வருகின்றனர். இவர்கள் இருவரும் செய்யும் நடனப் பயிற்சி வீடியோக்களை அவ்வபோது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருவது வழக்கம். அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகும். இவ்வாறு இரவு பகலாக நடனப்பயிற்சி செய்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் தடுமாறிய பாவனி அமீருடன் சேர்ந்து நன்றாக ஆட பழகிக் கொண்டார்.

தொடர்புடையவை  திருமணத்திற்கு முன்பே அமீர் பாவனி வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.!

நடனத்தை பாதியிலேயே நிறுத்திய அமீர் பாவனி..கடுப்பான ரம்யா...கண்ணீர் விட்டு அழும் பாவனி..என்ன ஆச்சு ரெண்டு பேருக்கும் 3

விளம்பரம்

 

தற்போது இந்த வாரத்திற்கான பிபி ஜோடிகள் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தேவலோகம் மற்றும் அரக்கர்கள் போல வேடமணிந்து உள்ளனர். அமீர் கிருஷ்ணர் வேடமணிந்து உள்ளார். அமீரும் பாவனியும் நடனம் அடிக் கொண்டு இருக்கும் போது திடீரென பாவனி நடனத்தை நிறுத்தினார். இதானல் அமீர் சற்று டென்ஷன் ஆகி விட்டார். அதைப் பார்த்த ரம்யா கிருஷ்ணன் உங்கள் இருவருக்கும் என்ன ஆனது? ஏன் நிறுத்திவிட்டீர்கள் என கோபமாக கேட்கிறார். பாவனி கண்கள் குளமாகி உள்ளது. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..Watch the below Video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment