வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதில் அருள்நிதி நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள திரைப்படம் தான் டி-பிளாக். இந்த படத்தை ‘எரும சாணி’ பிரபல யூடியூப் சேனலை நடத்தி வந்த விஜய் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ரத்தன் யோகான் என்பவர் இசையமைத்துள்ளார். அரவிந்த் சிங் என்பவர் இந்த கதையை தயாரித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அருள்நிதிக்கு ஜோடியாக அவந்திகா மிஸ்ரா நடித்து வருகிறார். மேலும், கரு. பழனியப்பன், தலைவாசல் விஜய், உமா ரியாஸ், எரும சாணி யூடியூப் சேனல் விஜய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் குறித்து பேசிய இயக்குனர் விஜய், கல்லூரியைப் பிண்ணனியாக கொண்டது டி பிளாக் படம், கல்லூரி என்பது வாழ்க்கையை செதுக்கும் பட்டறை, அங்கே சிலர் மாறுகிறார்கள், சிலர் மாற்றப்படுகிறார்கள், அதில் வீட்டுக்கு அடங்காத ஒருவனாவது வந்து சேர்கிறான், ஒரு மாணவனுக்கு காதல் பூக்கிறது, ஒரு மாணவனுக்கு மரணம் நிகழ்கிறது, ஒருவன் கவிதை எழுதுகிறான், ஒருவன் தன்னைத் தானே கண்டுபிடித்துக் கொள்கிறான் இது போன்ற வாழ்கையின் சில பக்கங்களைக் கொண்ட கல்லூரி பற்றிய கதை என்று படத்தின் கதை பற்றி ஆழமாக பேசினார்.

த்ரில்லர் ஆக உருவாகியுள்ள இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் அருள்நிதி இந்த முறையும் வித்தியாசமான கல்லூரி பிண்ணனியைக் கொண்ட த்ரில்லர் படத்தில் நடிக்கிறார். கல்லூரி பிண்ணனியை த்ரில்லராக வைத்து கடைசியாக வெளிவந்த படம் விசில். அதன்பிறகு பெரிய அளவில் எந்த படமும் வரவில்லை. அதனால் டி பிளாக் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்தின் சில ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த வீடியோவை காண..Watch the below Video..
Youtube Video Code Embed Credits: Moviebuff Tamil