மஹாவை கண் போல பார்த்துக்கொள்ளும் சூர்யா.! வயிறு எரியும் ராஜலட்சுமி.! ‘ஆஹா கல்யாணம்’ ப்ரோமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது சூர்யா மஹாவை புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். இதை பார்க்கும் சூர்யாவின் தாயார் ராஜலட்சுமி கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ஆஹா கல்யாணம்’ தொடர் தற்போது ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடர்பாக மாறிப் போய் இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மஹாவை கண் போல பார்த்துக்கொள்ளும் சூர்யா.! வயிறு எரியும் ராஜலட்சுமி.! 'ஆஹா கல்யாணம்' ப்ரோமோ இதோ 1
சூர்யா தனது மனைவியின் மஹாவுடன் இன்னும் வாழ்க்கையை தொடங்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் சூர்யாவின் தாத்தா வேதாச்சலம் தற்போது சூர்யாவிடம் மஹாவுடன் இணைந்து வாழுமாறு சத்தியம் வாங்கிக் கொள்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மஹா வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் சூர்யா, தனது தாத்தா அருகில் இருப்பதை தெரிந்து கொண்டு மஹாவிடம் கோலம் மிக நன்றாக இருப்பதாகவும், பெயிண்டிங் செய்தது போல இருப்பதாகவும் வர்ணித்துக் கொண்டிருக்கிறார். பின்னர் தன்னுடன் அமர்ந்து சாப்பிடுமாறு சூர்யா மஹாவை கேட்டுக்கொள்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  வாராஹி அம்மனுக்கு வீட்டிலேயே திருவிழா நடத்திய விஜே அர்ச்சனா.! பூஜை வீடியோ இதோ.!

மஹாவை கண் போல பார்த்துக்கொள்ளும் சூர்யா.! வயிறு எரியும் ராஜலட்சுமி.! 'ஆஹா கல்யாணம்' ப்ரோமோ இதோ 3

இதையெல்லாம் கவனிக்கும் வேதாச்சலம் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார். ஆனால் சூர்யாவின் தாயார் ராஜலட்சுமி கோபத்தில் உறைகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்…! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment