யோகி பாபுவுடன் இணைந்து மாரிமுத்து நடித்த கடைசி படம்..! ‘தூக்கு துரை’ படத்தின் ட்ரைலர் வெளியானது..!

நடிகர் யோகி பாபு, இனியா, சென்றாயன் பால சரவணன் ஆகிய பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தூக்குதுரை’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் யோகி பாபு, தனது அடுத்த படமான தூக்குத் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தொலைக்காட்சியில் தனது பயணத்தை தொடங்கி, இன்று திரையுலகின் முண்ணனி காமெடி நடிகராக உயர்ந்தவர் யோகி பாபு. தற்போது இவர் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். ‘கோலமாவு கோகிலா’, ‘மண்டேலா’, ‘கூர்கா’ போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்த நிலையில், தொடர்ந்து ஹீரோவாக நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

யோகி பாபுவுடன் இணைந்து மாரிமுத்து நடித்த கடைசி படம்..! 'தூக்கு துரை' படத்தின் ட்ரைலர் வெளியானது..! 1
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குய்க்கோ’ மற்றும் அயலான் திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. தொடர்ந்து ‘பூமர் அங்கிள்’, ‘அரண்மனை 4’, ‘போட்’ ‘குருவாயூர் அம்பலநடையில்’, ‘கோட்’, ‘அந்தகன்’, ‘மெடிக்கல் மிராக்கிள்’ போன்ற படங்கள் அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கின்றன. இந்த நிலையில் அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தூக்குதுரை’ படத்தின் ட்ரைலரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். யோகி பாபுவுடன் இணைந்து நடிகை இனியா, நடிகர்கள் மொட்ட ராஜேந்திரன், சென்றாயன், பால சரவணன், மறைந்த நடிகர் மாரிமுத்து ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டுள்ள 2 தமிழ் படங்கள்!!

யோகி பாபுவுடன் இணைந்து மாரிமுத்து நடித்த கடைசி படம்..! 'தூக்கு துரை' படத்தின் ட்ரைலர் வெளியானது..! 3
இந்தப் படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் என்பவர் எழுதியிருக்கிறார். கே எஸ் மனோஜ் என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நிர்பதுங்கா வர்மன் என்கிற மன்னரின் கிரீடம் வருடா வருடம் திருவிழாவில் வைத்து கொண்டாடப்படுகிறது. இந்த கிரீடத்தை திருடுவதற்கு ஒரு கும்பல் வருகிறது. அதன் பின்னர் என்ன நடந்தது? என்கிற கதையை மையமாகக் கொண்டு இந்த ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. படம் வருகிற 25ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் ட்ரைலர் வீடியோ வெளியாகியுள்ளது. நீங்களும் ட்ரைலர் வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sony Music South

விளம்பரம்

Leave a Comment