“முடி வெட்டுறது எல்லாம் குலத் தொழில்பா..! நமக்கு சரி வராது.!” ‘சிங்கப்பூர் சலூன்’ ட்ரைலர் வெளியானது.!

நடிகர் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. ரேடியோவில் ஆர்.ஜேவாக தனது வாழ்க்கை தொடங்கி பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறி, தற்போது தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி. நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், ‘எதிர்நீச்சல்’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘வாயை மூடி பேசவும்’, ‘இது என்ன மாயம்’, ‘நானும் ரவுடிதான்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். பின்னர் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை இயக்கி, நடித்ததன் மூலமாக இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"முடி வெட்டுறது எல்லாம் குலத் தொழில்பா..! நமக்கு சரி வராது.!" 'சிங்கப்பூர் சலூன்' ட்ரைலர் வெளியானது.! 1
தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ‘வீட்ல விசேஷம்’, ‘ரன் பேபி ரன்’ போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது இவர் ‘சிங்கப்பூர் சலூன்’ என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பாலாஜியுடன் இணைந்து சத்யராஜ், கிஷன் தாஸ், லால், மீனாட்சி சவுத்ரி, ரோபோ சங்கர், தலைவாசல் விஜய், ஜான் விஜய் போன்ற மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கின்றனர். இந்த படத்தை ஐசரி கணேசனின் வேல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. கோகுல் என்பவர் இந்த படத்தை எழுதி இயக்கி இருக்கிறார். ஜாவீத் ரியாஸ் என்பவர் இசையமைத்திருக்கும் இந்த படத்தின. பாடல்களை விவேக் மற்றும் மெர்வின் இருவரும் இணைந்து எழுதி இருக்கின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  பத்து தல படம் கொடுத்த வெற்றி.! ரசிகர்ளை அழைத்து பிரியாணி, சிக்கன் 65 விருந்து கொடுத்த சிம்பு.!

"முடி வெட்டுறது எல்லாம் குலத் தொழில்பா..! நமக்கு சரி வராது.!" 'சிங்கப்பூர் சலூன்' ட்ரைலர் வெளியானது.! 3
இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் நான்கு படங்கள் வரிசை காட்டி நின்றதால் பொங்கல் ரிலீஸில் இருந்து இந்த படம் பின்வாங்கி ஜனவரி 25ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது. தற்போது சலூன் கடையை மையமாக வைத்து ஏற்படும் பிரச்சனைகளை இந்த ட்ரைலர் பேசுகிறது. நீங்களும் அந்த ட்ரைலர் வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Think Music India

விளம்பரம்

Leave a Comment