வெற்றிமாறன் கதையில் சூரி நடிக்கும் அடுத்த படம்.! ‘கருடன்’ படத்தின் மாஸான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.!

பிரபல நடிகர் சூரி அடுத்தது ஹீரோவாக களமிறங்கும் படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் சூரியுடன் இணைந்து சசிகுமாரும் நடிக்க இருக்கிறார். அந்த டைட்டில் வீடியோவை தற்போது படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். 2009ம் ஆண்டு வெளியான ‘வெண்ணிலா கபடிக்குழு’ என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் சூரி. தொடர்ந்து ‘களவாணி’, ‘நான் மகான் அல்ல’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

வெற்றிமாறன் கதையில் சூரி நடிக்கும் அடுத்த படம்.! 'கருடன்' படத்தின் மாஸான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.! 1
காமெடியனாக நடித்து வந்த சூரி, தற்போது ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார். கடைசியாக வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை படத்தில் நடித்து மக்களின் மனங்களை கொள்ளை கொண்டிருக்கிறார் சூரி. இந்த படத்தின் கதாநாயகனாகவும், ஆக்ஷன் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் சூரி. தொடர்ந்து தற்போது அவர் ‘விடுதலை’ பாகம் இரண்டிலும் நடித்து வருகிறார். விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் வெற்றிமாறன் கதையில் ‘கருடன்’ என்கிற படத்தில் சூரி நடிக்க இருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுடன் மரண குத்தாட்டம் போடும் ஸ்ருதி ஹாசன்.! சுகுணா சுந்தரி பாடல்.!

வெற்றிமாறன் கதையில் சூரி நடிக்கும் அடுத்த படம்.! 'கருடன்' படத்தின் மாஸான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.! 3
இந்தப் படத்தில் சூரியுடன் இணைந்து இயக்குனர் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி ஆகிய இருவரும் நடிக்க இருக்கின்றனர். சூரியின் கதாபாத்திரம் ‘சொக்கன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Think Music India

விளம்பரம்

Leave a Comment