விஜய் தொடங்கி இருக்கும் அரசியல் கட்சியின் பெயரில் இலக்கணப பிழை இருப்பதாக யூடியூபை கலக்கி வரும் பிரபல தமிழ் ஆசிரியர் ஒருவர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இந்த பிழையை விஜய் மாற்றிக் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்திருக்கிறார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் சமீபத்தில் “தமிழக வெற்றி கழகம்” என்கிற ஒரு கட்சியை தொடங்கியிருந்தார். ஊழலற்ற, சாதி மதங்களால் மக்களை துண்டாட நினைக்கும் அரசியல் அல்லாமல் தூய அரசியலைத் தர இந்த முன்னெடுப்பை எடுத்திருப்பதாக விஜய் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

பலரும் விஜயின் அரசியல் வருகையை வரவேற்றனர். குறிப்பாக அவரது ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியில் இருந்தனர். கடந்த 50 வருடங்களாக திராவிட அரசியலை தமிழ் நாட்டிலிருந்து அப்புறப்படுத்த முடியாமல் பல கட்சிகள் தவித்து வரும் நிலையில், அதற்கு ஒரு மாற்றாக விஜய் இருப்பார் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் திராவிட அரசியலை தவிர்த்து விட்டு இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாது. திராவிட அரசியலை எதிர்க்கும் கட்சிகள் இங்கு கவுன்சிலர் கூட ஆனதில்லை என்று கருத்துக்களை கூறி வருகின்றனர். கள நிலவரம் இப்படியாக இருக்கும் நிலையில் விஜயின் கட்சி பெயரில் பல சிக்கல்கள் இருப்பதாக தெரிகிறது.

ஏற்கனவே வேல்முருகன் தலைமையில் இயங்கி வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இன் ஆங்கில மொழிபெயர்ப்பு TVK என்று வரும் நிலையில், விஜய் தொடங்க இருக்கும் கட்சியின் பெயரும் TVK என்று வருவதால் தேர்தல் ஆணையத்தில் சிக்கல் எனும் என்று அரசியல் ஆர்வலர்கள் கணித்துள்ளனர். தொடர்ந்து தமிழ்நாடு என அறிஞர் அண்ணா பெயர் மாற்றம் செய்ததை ஏற்காமல் தமிழகம் என்பதை விஜய் மேற்கோள் காட்டியிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மற்றும் ஆளுநர் ரவி போன்றவர்கள் ‘தமிழ்நாடு’ கிடையாது தமிழகம் என்று தான் அழைக்க வேண்டும் கருத்தை முன்வைத்து வரும் நிலையில், விஜயும் தமிழகம் என்று பெயர் வைத்திருப்பது சர்ச்சையை கிளப்பியிருந்தது.

இப்படியாக ஒரு புறம் சர்ச்சைகள் கிளம்பி கொண்டிருக்கும் நிலையில், தற்போது பிரபல தமிழ் ஆசிரியர் கதிரவன் விஜயின் கட்சி பெயரில் இலக்கணப் பிழை இருப்பதை சுட்டிக்காட்டி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இணையத்தை கலக்கி வரும் தமிழாசிரியராக இருப்பவர் கதிரவன். இவர் பொது இடங்களில் எழுதப்பட்டிருக்கும் பெயர்கள் மற்றும் அறிவிப்புகளில் இருக்கும் பிழைகளை சுட்டிக்காட்டி வீடியோ வெளியிட்டு பிரபலமானவர். தற்போது இவர் “தமிழக வெற்றி கழகத்தில்” வெற்றிக்கு பின்னர் ‘க்’ வரும் என்ற என்பதை இலக்கண முறையுடன் சுட்டிக்காட்டி இருக்கிறார். அவரின் அந்த காணொளி தற்போது வைரலாகி இருக்கிறது. நீங்களும் அந்த காணொளியை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Minnambalam Thamizh