அரசியல் அறிவிப்புக்குப் பின்னர் முதல் முறையாக ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்.! அதிர்ந்த புதுச்சேரி.!

கட்சி தொடங்கிய பின்னர் முதல் முறையாக நடிகர் விஜய் தற்போது புதுச்சேரிக்கு வருகை தந்திருக்கிறார். அவர் நடித்துவரும் கோட் படத்தின் ஷூட்டிங்காக அவர் தற்போது வருகை தந்திருக்கிறார். அவரை பார்ப்பதற்காக ஒரு பெரிய ரசிகர் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது. அந்த வீடியோவை விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் அரசியல் கட்சியை துவக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் என்றும் அவர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் அறிவிப்புக்குப் பின்னர் முதல் முறையாக ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்.! அதிர்ந்த புதுச்சேரி.! 1

விளம்பரம்

லட்சக்கணக்கில் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் விஜயின் அரசியல் வருகை மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் கலக்கமடைந்துள்ளதாகவே தெரிகிறது. கோடிக்கணக்கில் ரசிகர்களை வைத்திருக்கும் விஜய் அதை வாக்கு வங்கியாக மாற்றுவாரா? என்பது தேர்தலுக்குப் பின் தான் தெரிய வரும். இருந்தபோதிலும் விஜயிடம் இருக்கும் ரசிகர் கூட்டம் எத்தகையது? என்பதை விளக்கும் விதமாக தற்போது வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. விஜய் முதல் முறையாக கட்சி பெயரை அறிவித்த பின்பு புதுச்சேரிக்கு வருகை தந்திருக்கிறார்.

தொடர்புடையவை  இப்படியா காய்ஞ்சி போய் கிடப்பீங்க..! ஆதங்கமாக பேசிய இயக்குனர் Selvaraghavan வீடியோ..!

அரசியல் அறிவிப்புக்குப் பின்னர் முதல் முறையாக ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்.! அதிர்ந்த புதுச்சேரி.! 3
அங்கு அவரை பார்ப்பதற்காக லட்சக்கணத்தில் ரசிகர்கள் புகுந்து இருக்கின்றனர். அந்த ரசிகர்களுடன் விஜய் செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த வீடியோவை அவர் தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். வைரலாகி வரும் அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment