நடிகர் ஸ்ரீகாந்த் மகளுக்கு இன்று 13வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்களை ஸ்ரீகாந்த் மனைவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். ரசிகர்கள் பலரும் ஸ்ரீகாந்த் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ஸ்ரீகாந்த் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களின் நடித்து வரும் தென்னிந்திய நடிகர் ஆவார். இவர் 2002ம் ஆண்டு ‘ரோஜா கூட்டம்’ என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார்.

பின்னர் அவர் ‘ஏப்ரல் மாதத்தில்’, ‘பார்த்திபன் கனவு’, ‘கனா கண்டேன்’, ‘மெர்குரி பூக்கள்’, ‘கிழக்கு கடற்கரை சாலை’, ‘நண்பன்’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்று சொன்னால் அது ‘பார்த்திபன் கனவு’ தான். இந்த படத்தில் சினேகாவுக்கு ஜோடியாக இவர் நடித்திருப்பார்.

இவரை தெலுங்கில் ஸ்ரீராம் என்று அழைப்பது வழக்கமாக இருக்கிறது. ஸ்ரீகாந்தியின் தந்தை சித்தூரை சேர்ந்தவர். எனவே இவர் தந்தை வழியில் தெலுங்கும், தாய் வழியில் தமிழும் ஆவார்.

ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த இவர் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் சென்னைக்கே குடி பெயர்ந்தார்.

ஸ்ரீகாந்த் 2008ம் ஆண்டு வந்தனா என்பவரைதிருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஆஹில் மற்றும் ஆஹனா என்கிற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் கதாநாயகனாக நடித்து வந்த ஸ்ரீகாந்த் 2002ம் ஆண்டு தொடங்கி 2009 ம் ஆண்டு வரை பல படங்களில் நடித்து வந்தார். பின்னர் அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்ததால், தற்போது அவர் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்து வருகிறார்.

‘நண்பன்’ படத்தில் அவர் விஜய்க்கு நண்பனாக நடித்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘காபி வித் காதல்’. இந்த படத்தில் ஜெய் மற்றும் ஜீவாவிற்கு அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஸ்ரீகாந்த் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வளவாக வெளியில் பகிர்ந்ததில்லை. இந்த நிலையில் அவரது இளைய மகளுக்கு இன்று 13வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்களை தற்போது அவரது மனைவி சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

ரசிகர்கள் பலரும் ஸ்ரீகாந்த் மகள் ஆஹானாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.