மெகா சீரியலை ஸ்லோ மோஷன்ல பாத்தா மாதிரி இருக்கு ‘டெவில்’ படம் பற்றி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.!

இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் நடிகர்கள் விதார்த், பூர்ணா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘டெவில்’. தற்போது இந்த படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். அவர் கூறியுள்ளதாவது, “படத்தின் தொடக்கத்தில் ஹீரோயின் விரக்தியில் ஒரு காரை ஓட்டிக்கொண்டு வருவது போல காட்டுகிறார்கள். அப்போது கார் ஒரு பைக் மீது மோதி ஒரு இளைஞனின் கை உடைந்து விடுகிறது. அந்த இளைஞனை மருத்துவமனையில் சேர்த்து முழு செலவையும் பார்த்து வருகிறார் ஹீரோயின். அப்போது ஹீரோயினுக்கும் இளைஞனுக்கும் காதல் ஏற்படுகிறது. அதன் பின்னர் வீட்டிற்கு வரும் ஹீரோயினுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மெகா சீரியலை ஸ்லோ மோஷன்ல பாத்தா மாதிரி இருக்கு 'டெவில்' படம் பற்றி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.! 1

விளம்பரம்

வீட்டிற்கு வரும் ஹீரோயினுக்கு அங்கு தனது கணவர் இருப்பதை பார்த்து அதிர்ச்சி ஏற்படுகிறது. அவர் தன்னுடைய தவறான கள்ளக்காதலினால் தவறு நடந்து விட்டதாகவும், இனி சேர்ந்து வாழலாம் என்றும் ஹீரோயினை அழைக்கிறார். அப்போது அந்த இளைஞர் வருகிறார் அதன் பின்னர் என்ன நடந்தது.? என்பதுதான் இந்த படத்தின் மீதிக் கதை. பொதுவாகவே ஒரு படம் என்றால் 60 முதல் 65 சீன்கள் இருக்கும். ஆனால் வெறும் 10 சீனை வைத்துக் கொண்டு 2 மணி நேரம் இந்த படத்தை ஓட்டி இருக்கின்றனர். அரை மணி நேரத்தில் முடியும் குறும்படம் போல் இருக்கிறது. முதல் பாதியில் அந்த இளைஞர் நன்றாக நடித்திருந்தார். படம் ஓடினதே தெரியவில்லை. ஆனால் இரண்டாவது பாதி மிக காமெடியாக இருந்தது.

தொடர்புடையவை  நாய் குட்டி ஒன்றை வாங்கி தனது மகளுக்கு பரிசளித்த சூர்யா - ஜோதிகா தம்பதிகள்.! ஜோ வெளியிட்ட Cute வீடியோ.!

மெகா சீரியலை ஸ்லோ மோஷன்ல பாத்தா மாதிரி இருக்கு 'டெவில்' படம் பற்றி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.! 3

விளம்பரம்

விதார்த் கள்ளக்காதல் பற்றி காட்டுகிறார்கள். ஆனால் அதில் ஒன்றும் சீரியஸாக இல்லை. மேலும் இந்த படம் ஹாரரா? த்ரில்லரா.? பேய் படமா.? சாமி படமா/? கிறிஸ்டியன் படமா.? ஹிந்து படமா.? என்கிற குழப்பம் நீடித்தது. பைபிளை காட்டுகிறார்கள். சிலுவையை காட்டுகிறார்கள். அகோரியை காட்டுகிறார்கள். இதுபோல குழப்பம் ஒரு பக்கம் இருக்க, 25 நிமிடங்களுக்கு மேல் பாட்டு ஓடுகிறது. வலுக்கட்டாயமாக பாடல்கள் திணித்தது போல இருந்தது. ஸ்டார்டிங் மற்றும் கிளைமேக்ஸ் நன்றாக இருந்தது. அதற்காக இரண்டு மணி நேரம் இந்த படத்தை பார்க்க முடியுமா? மெகா சீரியலை ஸ்லோ மோஷனில் எடுத்து வைத்தது போல இந்த படம் இருக்கிறது” என்று விமர்சித்தார். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Tamil Talkies

விளம்பரம்

Leave a Comment