நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். நானும் ரவுடிதான் படத்தில் இருந்தே இருவரும் காதலித்து வருகின்றனர். நயன்தாரா நடிப்பில் இறுதியாக வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் கூட விக்னேஷ் சிவன் இயக்கியது தான். இவர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கடி கோவிலுக்கு செல்வது, வெளிநாடு செல்வது, ட்ரிப் போவது என்று சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது என்று சிலர் புரளியை கிளப்பி வருகின்றனர். வேறு சிலரோ விக்னேஷ் மற்றும் நயன்தாராவுக்கு நிச்சயம் முடிந்துள்ளது, இருவரும் வருகின்ற ஜூன் 9ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று தங்கள் பங்கிற்கு ஒரு கதையை சொல்லி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது எதுவுமே நயன்தாரா விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து உறுதிபடுத்தப்படவில்லை. இந்நிலையில் நேற்று இருவரும் திருச்சியில் உள்ள விக்னேஷ் சிவனின் குல தெய்வக் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளனர். அந்த வீடியோவை பதிவிட்ட விக்னேஷ் சிவன் வாழ்க்கையில் சில நல்ல முடிவுகளை எடுப்பதற்காக உத்தரவு கேட்க வந்துள்ளோம் என பதிவிட்டு இருந்தார். இதனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவது உறுதி என்ற தகவல் பரவி வருகிறது. மேலும் திருப்பதியில் திருமணமும், சென்னையில் பிரம்மாண்டமாக வரவேற்பும் நடத்த இருவரும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

திருமண வேலைகள் இருக்கும் காரணத்தினால்தான் பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவை நயன்தாரா புறக்கணித்தார் என்றும் தகவல் பரவியது. இப்படி பாசமாக இருக்கும் இவர்களின் க்யூட்டான நிகழ்வுகளை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றுவது வழக்கம். அதுபோல தற்போது மகாபலிபுரம் அசைவ ஹோட்டலுக்கு சென்ள விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு ஊட்டி விடுவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது…Watch the below Video..