தமிழ் திரையுலகில் கலைக் குடும்பமாக விளங்கி வரும் விஜயகுமாரின் குடும்பத்தில் விரைவில் திருமண நிகழ்வு ஒன்று நடைபெற இருக்கிறது. அதற்காக பத்திரிக்கை வைக்கும் பணிகளில் தற்போது விஜயகுமார் தீவிரமாக இறங்கியுள்ளார்.

தமிழ் திரையுலகில் பழம்பெரும் நடிகர் விஜயகுமார். இவருக்கு முத்துக்கண்ணு மற்றும் மஞ்சுளா என்ற இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். மகன் அருண் விஜய், மகள் வனிதா விஜயகுமார், ப்ரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார் என அனைவரும் திரைத்துறையிலேயே இருந்து வருகின்றனர். வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி சில படங்களில் மட்டுமே நடித்தனர்.

திருமணமாகி குடும்பம் குழந்தைகள் என்று ஆன பிறகு மூவரும் திரைத் துறையை விட்டு விலகி விட்டனர். தற்போது விஜயகுமாரும் அவரது மகன் அருண் விஜய் மட்டுமே படங்களில் நடித்து வருகின்றனர் .நடிகர் விஜயகுமாரின் மூத்த மனைவி முத்துக்கண்ணுவிற்கு அருண் விஜய், அனிதா விஜயகுமார், கவிதா விஜயகுமார் என்று மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் விஜயகுமாரின் மூத்த மனைவியின் மகளாக இருக்கும் அனிதா விஜயகுமாரின் மகள் தியாவிற்கு வருகிற 19ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. தியாவின் திருமண நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்து இருந்தது.

திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே மீதம் இருப்பதால் பத்திரிக்கை வைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

நேற்று தனது மகள்களுடன் சூப்பர் ஸ்டார் இல்லத்திற்கு நேரில் சென்ற விஜயகுமார் அவரை பேத்தியின் திருமணத்திற்கு வருமாறு அழைத்து இருந்தார். தொடர்ந்து தனுஷுக்கும் அழைப்பு விடுத்தது இருந்தனர்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. விஜயகுமார் இல்ல திருமணத்தில் தமிழ் திரையுலகமே ஒன்று கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.