ஜீ தமிழில் நடிகர் சிபு சூர்யன், வைஷ்ணவி நடிக்கும் புது தொடர்.! ‘வீரா’ ப்ரோமோ வெளியானது.!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகர் சிபு சூர்யன் மற்றும் வைஷ்ணவி ஆகியோர் நடிக்கும் புது சீரியலின் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ரோஜா’ என்கிற சீரியலில் அர்ஜுனாக நடித்து மக்கள் மனங்களில் இடம் பிடித்தவர் நடிகர் சிபு சூர்யன். இவரது மனைவி ரோஜா இவரை அர்ஜுன் சார் என்று அழைப்பது பலருக்கும் பிடித்துப் போயிருந்தது. அர்ஜுன் மற்றும் ரோஜா இருவரின் ரொமான்ஸ் காட்சிகளுக்காகவே இந்த நாடகத்தை பலரும் விரும்பி பார்த்து வந்தனர். ‘ரோஜா’ நாடகம் திடீரென முடிவுக்கு வந்த நிலையில், அதற்கு அடுத்தபடியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா சீசன் 2’வில் ஹீரோவாக களம் இறங்கினார் சிபு சூர்யன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.! 

ஜீ தமிழில் நடிகர் சிபு சூர்யன், வைஷ்ணவி நடிக்கும் புது தொடர்.! 'வீரா' ப்ரோமோ வெளியானது.! 1
ஆனால் பாரதி கண்ணம்மா சீசன் ஒன்றுக்கு கிடைத்த அளவிற்கு கூட சீசன் 2 விற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. நேரத்தை மாற்றி அமைத்தும் கூட நாடகத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் நாடகத்தை பாதியிலேயே முடித்திருந்தனர். இந்த நிலையில் சிபு சூர்யன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புது நாடகம் ஒன்றில் கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியானது. ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘பேரன்பு’ போன்ற சீரியலில் ஹீரோயினாக நடித் நடிகை வைஷ்ணவியும் இந்த நாடகத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆரம்பத்தில் ‘சிவமுருகன் டெக்ஸ்டைல்’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் கசிந்த நிலையில், தற்போது நாடகத்தின் பெயர் ‘வீரா’ என்பது தெரிய வந்துள்ளது.

விளம்பரம்
தொடர்புடையவை  சத்தமில்லாமல் இரண்டாவது திருமணத்தை முடித்த தமிழ் பிக்பாஸ் பிரபலம்.! திருமண புகைப்படங்கள்.!

ஜீ தமிழில் நடிகர் சிபு சூர்யன், வைஷ்ணவி நடிக்கும் புது தொடர்.! 'வீரா' ப்ரோமோ வெளியானது.! 3
இந்த நாடகத்தின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. பலரும் சிபு சூர்யன் ஹீரோவாக நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், நடிகர் அருண் ஹீரோவாக நடிப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும் சிபு சூர்யன் நான்கு சகோதரிகளுக்கு அண்ணனாகவும், அவர் திடீரென மரணம் அடைந்து விட்டது போலவும் ப்ரோமோ வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Zee Tamil

விளம்பரம்

Leave a Comment