மொக்க படம்.! ஒரு சீன் கூட நல்லா இல்ல.! படம் வரத்துக்கு முன்னாடியே Flop ஆயிடுச்சு.! ப்ளூ சட்டை விமர்சனம்.!

நேற்று திரையரங்குகளில் வெளியான ‘லால் சலாம்’ திரைப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். அவர் கூறியுள்ளதாவது, “படத்தின் ஆரம்பத்தில் ஒரு கட்சி அலுவலகத்தை காட்டுகிறார்கள். அங்கு பேசும் அரசியல்வாதி ஒருவர் இந்த ஊரில் ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அதனால் முஸ்லிம் வாக்குகள் கிடைக்காது. எனவே இருவருக்கும் சண்டை மூட்டி விட்டு வாக்குகளை அள்ளலாம் என திட்டம் போடுகிறார். இதற்கிடையில் இரண்டு கிரிக்கெட் டீம் இருக்கிறது. அவர்களுக்குள் ஒரு சண்டை வருகிறது. மேலும் ஊரில் நடக்கும் தேர்த்திருவிழாவும் நின்று போகிறது. இதை சரி செய்ய ஹீரோ முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அப்போது பாம்பேயில் இருந்து டான் ஒருவர் வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மொக்க படம்.! ஒரு சீன் கூட நல்லா இல்ல.! படம் வரத்துக்கு முன்னாடியே Flop ஆயிடுச்சு.! ப்ளூ சட்டை விமர்சனம்.! 1
அந்த டான் தான் ரஜினிகாந்த். இந்த படத்தில் ஒரு கதாபாத்திரம் கூட சரியாக வடிவமைக்கப்படவில்லை. ஹீரோ உடைய நோக்கம் என்னவென்றே தெரியவில்லை. அவர் கிரிக்கெட் வீரரா? ஹீரோயினை லவ் பண்ணுரவரா? அல்லது பிரச்சினைகளை சரி செய்பவரா? என்ற ஒரு தெளிவு இல்லாமல் ஓடுகிறது. அதேபோல் ரஜினிகாந்த் பிழைக்க பாம்பேவிற்கு சென்றதாகவும், அங்கு டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரியை தன் கைக்குள் வைத்திருப்பதாகவும், பின்னர் டானாகி விட்டதாகவும் கூறுகின்றனர். இதற்கெல்லாம் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. படத்தின் மேக்கிங் படு மொக்கையாக இருந்தது. தெரு முச்சந்தியில் வைத்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

விளம்பரம்
தொடர்புடையவை  சூரியின் வெறித்தனமான நடிப்பில் உருவாகியுள்ள 'கருடன்' படத்தின் ட்ரைலர் இதோ.!

மொக்க படம்.! ஒரு சீன் கூட நல்லா இல்ல.! படம் வரத்துக்கு முன்னாடியே Flop ஆயிடுச்சு.! ப்ளூ சட்டை விமர்சனம்.! 3

தேர் திருவிழா மற்றும் ஒரு சண்டை காட்சிக்கு மட்டுமே செலவு செய்திருக்கிறார்கள். இந்த படம் வருவதற்கு முன்னே முன்பே ஃபிளாப் ஆகிவிட்டது. அரை ஜான் வயித்துக்காக ரஜினிகாந்த் மக்களை ஏமாற்றி வந்தார். இவர் பார்த்த சங்கி வேலையால் மக்கள் காண்டாகி இருக்கிறார்கள். ‘ஜெயிலர்’ படம் பார்த்த பின்பு எமோஷனல் ஆகி ரசிகர்கள் சில்லறையெல்லாம் சிதற விட்டார்கள். ஆனால் தலைவர் நார்த் இந்தியாவிற்கு சென்று சாமியார் கால்களில் எல்லாம் விழுந்ததை பார்த்த பின்பு தலைவரே ஒரு சில்லறை தான் என்று தெரிந்து கொண்டார்கள். இதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எங்க அப்பா சங்கி கிடையாது என்று மேடைகளில் பேசுகிறார்.

விளம்பரம்

மொக்க படம்.! ஒரு சீன் கூட நல்லா இல்ல.! படம் வரத்துக்கு முன்னாடியே Flop ஆயிடுச்சு.! ப்ளூ சட்டை விமர்சனம்.! 5

ஆனால் ரஜினிகாந்த் செய்வது அனைத்துமே சங்கி வேலை தான். படத்துல மத நல்லிணக்கத்தை பற்றி பேசுறாரு. ஏர்போர்ட்டில் போய் சங்கி என்பது கெட்ட வார்த்தை கிடையாது என்கிறார். ரஜினிக்கு ஏர்போர்ட் என்றாலே கண்டம் தான். ஏர்போர்ட்டில் தலீவர் வாயை திறந்தாலே அது கண்டன்ட் ஆகி விடுகிறது. இந்த படத்தின் ஒரு காட்சியில் ஒரு கலவரத்தில் கத்தியால் சிலரை குத்தி விட்டு இந்த கத்தியில் இருக்கும் ரத்தம் யாருடைய ரத்தம்? என்று காட்ட முடியுமா என்று அருத பழசான ஒரு டயலாக் பேசுகிறார். இதைப் பார்த்தால் “ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதை” தான் ஞாபகம் வருகிறது. நீங்கள் இன்னும் எங்களை பைத்தியக்காரன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?” என்று பேசினார். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Tamil Talkies

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment