பிரதீப் ஆண்டனிக்கு அடித்த ஜாக்பாட்.! படத்தில் கமிட் ஆகி இருக்கும் செய்தியை அறிவித்த பிரதீப் ஆண்டனி.!

பிக்பாஸ் சீசன் 7ல் கலந்துகொண்ட நடிகர் பிரதீப் ஆண்டனி தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில் தனக்கு புதிய படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் செய்தியை அவர் மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறார். ‘அருவி’, ‘வாழ்’ போன்ற சில படங்களின் மூலமாக தமிழ் மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர் நடிகர் பிரதீப் ஆண்டனி.

பிரதீப் ஆண்டனிக்கு அடித்த ஜாக்பாட்.! படத்தில் கமிட் ஆகி இருக்கும் செய்தியை அறிவித்த பிரதீப் ஆண்டனி.! 1

விளம்பரம்

இவருக்கு பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீசனின் வலிமையான போட்டியாளராக விளையாடி வந்தார் பிரதீப். இவர்தான் இந்த சீசனின் டைட்டிலை வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் பிரதீப் ஆண்டனி விளையாட்டில் இருந்தால் நம்மால் ஜெயிக்க முடியாது என்று சொல்லி அவரை பிக்பாஸில் இருந்து வெளியேற்ற போட்டியாளர்கள் பலரும் திட்டம் தீட்டினர்.

பிரதீப் ஆண்டனிக்கு அடித்த ஜாக்பாட்.! படத்தில் கமிட் ஆகி இருக்கும் செய்தியை அறிவித்த பிரதீப் ஆண்டனி.! 3

விளம்பரம்

பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார், தவறாக பேசுகிறார் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டை அவர் மீது சுமத்தி ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு பிரதீப்புக்கு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த வந்தது. பிக் பாஸில் இருந்ததை விட வெளியே வந்த பிறகு அவருக்கு பெரிய அளவில் புகழ் கிடைத்தது.

தொடர்புடையவை  சித்தி வா...ரீல்ஸ் பண்ணலாம்...சித்தியுடன் சேர்ந்து செம்ம Cute ஆக ரீல்ஸ் செய்யும் சாண்டி மகள் லாலா

பிரதீப் ஆண்டனிக்கு அடித்த ஜாக்பாட்.! படத்தில் கமிட் ஆகி இருக்கும் செய்தியை அறிவித்த பிரதீப் ஆண்டனி.! 5

விளம்பரம்

இந்த நிலையில் பிரதீப் ஆண்டனி திரைப்படத்தை இயக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். ஆனால் அவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து இருப்பதாகவும், அதற்காக அட்வான்ஸ் தொகை ரூ.9 லட்சத்தை வாங்கி இருப்பதாகவும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

பிரதீப் ஆண்டனிக்கு அடித்த ஜாக்பாட்.! படத்தில் கமிட் ஆகி இருக்கும் செய்தியை அறிவித்த பிரதீப் ஆண்டனி.! 7

விளம்பரம்

அதில் அவர் கூறி இருப்பதாவது, “இந்த வருஷம் நடிச்சு கொஞ்சம் காசு சம்பாதிக்கலாம்னு அட்வான்ஸ் எல்லாம் வாங்கிட்டேன். படம் பொறுமையா தான் வரும். எப்ப வரும்னு எல்லாம் கேட்காதீங்க. வரும்போது முடிந்தால் தியேட்டர்ல பாருங்க” என்று சொல்லி அட்வான்ஸ் தொகைக்கான செக்கையும் பதிவிட்டு இருக்கிறார். அவரின் இந்த பதிவுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது. பலரும் பிரதீப்பிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

விளம்பரம்

Twitter Original Source From: Pradeep Antony

விளம்பரம்

Leave a Comment