இளையராஜா இசையமைக்கும் 1417வது படம்.! பிரஜினின் ‘நினைவெல்லாம் நீயடா’ ட்ரைலர் இதோ.!

நடிகர் பிரஜின் ஹீரோவாக நடித்திருக்கும் ‘நினைவெல்லாம் நீயடா’ என்கிற படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்த நிலையில், தற்போது ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பிரபு தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனங்கள் எழுதியிருக்கிறார். இவர் ஏற்கனவே ‘அருவா’, ‘சண்டை’ போன்ற படங்களை இயக்கியவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இளையராஜா இசையமைக்கும் 1417வது படம்.! பிரஜினின் 'நினைவெல்லாம் நீயடா' ட்ரைலர் இதோ.! 1
இயக்குனர் ஆதிராஜன் இயக்கத்தில் பிரஜின் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் மனிஷா யாதவ் சினாமிகா கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர், ரெடின் கிங்ஸ்லி, மனோபாலா, ரஞ்சன் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்திற்கு ராஜாபட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பை செய்திருக்கிறார். முனிகிருஷ்ணன் கலை அமைக்க, சண்டை காட்சிகளை பிரதீப், தினேஷ் கவனித்திருக்கின்றனர். நடன காட்சிகளை தினேஷ் மற்றும் தீனா மாஸ்டர்கள் கவனித்திருக்கின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டு இருந்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  படத்துல சுத்தமா லாஜிக் இல்ல.! ஒரே சண்டையை 1 மணி நேரமா போட்டுட்டு இருக்கானுங்க.!

இளையராஜா இசையமைக்கும் 1417வது படம்.! பிரஜினின் 'நினைவெல்லாம் நீயடா' ட்ரைலர் இதோ.! 3
இந்த நிலையில் படத்திலிருந்து தற்போது ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Zee Music South

விளம்பரம்

Leave a Comment