‘பரிதாபங்கள்’ கோபி, சுதாகர் நடிக்கும் முதல் வெப் தொடர்.! ‘கோடியில் இருவர்’ டீசர் வெளியானது.!

Youtube ஐ கலக்கி வரும் இருவர்களான கோபி மற்றும் சுதாகர் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் புது வெப் தொடர் தான் ‘கோடியில் இருவர். இந்த சீரிஸின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது் ஆரம்பத்தில் தங்களது மிமிக்ரி திறமையை வெளிப்படுத்த விஜய் தொலைக்காட்சியில் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் தான் கோபி மற்றும் சுதாகர். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த நிகழ்ச்சியின் ஆரம்பகட்டத்திலேயே இவர்கள் இருவரும் வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர் ‘மெட்ராஸ் சென்ட்ரல்வ என்கிற சேனலில் இணைந்து பணியாற்றிய இவர்களுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

'பரிதாபங்கள்' கோபி, சுதாகர் நடிக்கும் முதல் வெப் தொடர்.! 'கோடியில் இருவர்' டீசர் வெளியானது.! 1

விளம்பரம்

குறுகிய காலத்திலேயே தங்களது நகைச்சுவை திறமையால் புகழின் உச்சிக்கே சென்றனர் கோபியும், சுதாகரும். அதன்பின்னர் ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ சேனலில் இருந்து விலகி, பரிதாபங்கள் என்கிற புது சேனலை தொடங்கினர். அரசியல்வாதிகளை கலாய்ப்பது, திருமண வீடுகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், தேர்வுகள், விவசாயிகளின் பரிதாப நிலைமை என அனைத்தையும் விழிப்புணர்வுடன் கூடிய காமெடி நிகழ்ச்சியாக வழங்கி வருகின்றனர். இதனால் இவர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். நம் வீட்டில் நடப்பது, நாம் சொந்தமாக அனுபவித்தது என அனைத்தையும் இவர்கள் காமெடியுடன் காட்டுவதால் இவர்களுக்கு ரசிகர் பட்டாளம் அதிகம்.

தொடர்புடையவை  இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்லும் புகழ்.! நண்பனை வழியனுப்ப கணவருடன் வந்த ரித்திகா.!

'பரிதாபங்கள்' கோபி, சுதாகர் நடிக்கும் முதல் வெப் தொடர்.! 'கோடியில் இருவர்' டீசர் வெளியானது.! 3

விளம்பரம்

இந்த நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து தற்போது ‘கோடியில் இருவர்’ என்கிற வெப் சீரிஸில் நடிக்க இருக்கின்றனர். அதற்கான டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த டீசரைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Parithabangal

விளம்பரம்

Leave a Comment