மனோஜை ஏமாற்றிவிட்டு ஓடிய பெண்ணை காரில் அழைத்து வரும் முத்து.! ப்ரோமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் மனோஜிடம் 24 லட்சத்தை ஏமாற்றிக் கொண்டு ஓடிய பெண்ணை தற்போது முத்து தனது காரில் சென்னைக்கு அழைத்து வந்து கொண்டிருக்கிறார். இனி மனோஜ் மற்றும் பணத்தை ஏமாற்றிக் கொண்டு ஓடிய ஜீவா இருவருக்கும் இடையே கதையை நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மனோஜை ஏமாற்றிவிட்டு ஓடிய பெண்ணை காரில் அழைத்து வரும் முத்து.! ப்ரோமோ இதோ 1
மனோஜை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஜீவா என்கிற பெண் 24 லட்சத்தை ஏமாற்றிவிட்டு மண்டபத்திலிருந்து ஓடி விடுகிறார். தற்போது மனோஜ் சொந்த தொழில் செய்வதற்கு பணம் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறார். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ரோகிணி, மனோஜிடம் பணத்தை ஏமாற்றிக்கொண்டு ஓடிய ஜீவாவை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறுகிறார். அதற்கு அவர் அவர்தான் கனடாவிற்கு ஓடி விட்டாளே என்று கூறுகிறார்.

விளம்பரம்

மனோஜை ஏமாற்றிவிட்டு ஓடிய பெண்ணை காரில் அழைத்து வரும் முத்து.! ப்ரோமோ இதோ 3

அந்த சமயம் பார்த்து முத்து ஒரு பெண்ணை தனது காரில் அழைத்து வருகிறார். அவரிடம் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்க கனடாவில் இருந்து வருகிறேன் என அவர் பதிலளிக்கிறார். எனவே முத்து ஜீவாவைத்தான் அழைத்து வருகிறார் என்பது தெரிகிறது. இனி கதைக்களம் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment