அன்னையர் தினம்: இரட்டை மகன்களை கொஞ்சி விளையாடும் அழகிய வீடியோவை பகிர்ந்த நயன்தாரா.!

இன்று அன்னையர் தினத்தை உலகமெங்கிலும் உள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர். தியாகத்தின் திருவுருவங்களாக வாழ்ந்து வரும் அன்னையர்களை மதித்து போற்றுவதற்கும், அவர்களின் தியாகங்களை நினைவு கூறுவதற்குமாக இந்த நாளை உலகம் எங்கிலும் உள்ள மக்கள் கொண்டாடுகின்றனர். அந்த வகையில் நடிகை நயன்தாராவும் தனது இரட்டை மகன்களை கொஞ்சி விளையாடும் அழகிய வீடியோவை அவரது கணவர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

அன்னையர் தினம்: இரட்டை மகன்களை கொஞ்சி விளையாடும் அழகிய வீடியோவை பகிர்ந்த நயன்தாரா.! 1

விளம்பரம்

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் 10 வருட காதலுக்கு பின்னர் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு உயிர் மற்றும் உலகம் என இரண்டு மகன்கள் பிறந்தனர். வாடகைத் தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை இந்த தம்பதிகள் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து மகன்களுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதிகள் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது இரட்டை மகன்களுடன் நயன்தாரா விளையாடும் வீடியோவை விக்னேஷ் சிவன் பகிர்ந்திருக்கிறார்

தொடர்புடையவை  "மீண்டும் ஆஸ்கார் மேடையில் சூர்யா"!! "கலந்துக்கொள்ளும் படி அழைப்பு விடுத்துள்ள ஆஸ்கார் சம்மேளான்!!

அன்னையர் தினம்: இரட்டை மகன்களை கொஞ்சி விளையாடும் அழகிய வீடியோவை பகிர்ந்த நயன்தாரா.! 3

விளம்பரம்

வீடியோவை பகிர்ந்து அவர், “குழந்தைகள் என்று வந்துவிட்டால் நயன்தாரா பத்துக்கு 99 மதிப்பெண்கள் வாங்குவார் இன்று உலக அன்னையர் தினம். மீண்டும் சொல்கிறேன் நீங்கள் தான் என்னுடைய உயிர் மற்றும் உலகம்” என்று இந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவிற்கு சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் குவிந்து உள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண…! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

விளம்பரம்

Instagram Video Embed Code Credits: Wikki Official

விளம்பரம்

Leave a Comment