நகையை எடை போட்டு பார்க்க சொன்ன குழலி.! மயங்கி விழுந்து நாடகமாடிய தங்க மயில்.! ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது தங்க மயிலுக்கு போட்ட நகைகளை எடை போட்டு பார்க்கும்படி சரவணன் சகோதரி குழலி கேட்டுக் கொண்டிருக்கிறார். இதைக் கேட்கும் தங்கமயில் மயங்கி விழுவது போல நாடகமாடுகிறார். ஆனால் இதை அனைவரும் உண்மை என நம்பி பதறிக் கொண்டிருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நகையை எடை போட்டு பார்க்க சொன்ன குழலி.! மயங்கி விழுந்து நாடகமாடிய தங்க மயில்.! ப்ரோமோ 1

விளம்பரம்

பாண்டியனின் மூத்த மகனாக இருக்கும் சரவணனுக்கு தங்கமயில் என்கிற பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுக்கின்றனர். ஆனால் தங்கமயிலின் குடும்பம் ஒரு பிராடு என தெரியாமல் அவர்கள் இந்த சம்பந்தத்தை மேற்கொள்கின்றனர். ஆனால் தங்கமயில் உண்மையைச் சொல்லித் திருமணம் செய்து விடலாம் என கூறியும் அவரின் பெற்றோர்கள் இதைக் கேட்கவில்லை. எனவே திருமணம் நடக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் தங்க மயிலின் பெற்றோர் திருமணத்திற்கு பாதி பணத்தை கொண்டு வந்து கொடுக்கின்றனர்.

தொடர்புடையவை  ஷாக் அடித்து கீழே விழுந்த கண்ணம்மா.! பாசத்தில் எழுந்து நடக்க முயற்சிக்கும் கண்ணம்மாவின் அம்மா.!

நகையை எடை போட்டு பார்க்க சொன்ன குழலி.! மயங்கி விழுந்து நாடகமாடிய தங்க மயில்.! ப்ரோமோ 3

விளம்பரம்

அப்போது சரவணன் சகோதரியாக இருக்கும் குழலி இன்னும் திருமணமே முடியவில்லை, அதற்குள் எப்படி பாதி பணத்தை வந்து கொடுக்கிறீர்கள்? என்று கேட்கிறார். மேலும் தங்கமயிலுக்கு போட்ட நகைகளை எடை போட்டு பார்க்கலாம் எனவும் கூறுகிறார். இதைக் கேட்கும் தங்கமயில் மயங்கி விழுகிறார். நகையில் பாதி நகை கவரிங் நகை என்பது தங்க மயில் குடும்பத்திற்கு மட்டுமே தெரியும். எனவே அடுத்து என்ன பிரச்சனை எழும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நீங்களும் தற்போது வெளியாக இருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video.!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment