விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சரவணன் தங்கமயில் திருமணத்தை நிறுத்துவதற்காக ராஜியின் அண்ணன் மணப்பெண்ணை கடத்த திட்டம் தீட்டுகிறார். ஆனால் மணப்பெண்ணுக்கு பதிலாக மீனா மற்றும் ராஜியை ரவுடிகள் கடத்திக்கொண்டு சென்று விடுகின்றனர். இதனால் அடுத்து என்ன நடக்கும்? என்கிற எதிர்பார்ப்பு எடுத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாண்டியன் மனைவி கோமதியின் குடும்பத்திற்கும், பாண்டியன் குடும்பத்திற்கும் சுத்தமாக செட் ஆகாது. எனவே பாண்டியன் மகன் சரவணன் திருமணத்தை நிறுத்த கோமதியின் அண்ணன் மகனும், ராஜியின் அண்ணனுமான திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது மணமகள் தங்க மயிலை கடத்தி வர சில ரவுடிகளை அனுப்புகிறார். ஆனால் ரவுடிகள் மீனா மற்றும் ராஜி இருவரையும் கடத்திக் கொண்டு சென்று விடுகின்றனர். தங்கமயில் திருமண மண்டபத்தில் தான் இருக்கிறார்.

எனவே சரவணன் தங்கமயில் திருமணம் நடைபெறுமா? மீனாவும் ராஜியும் ரவுடிகளிடமிருந்து எப்படி தப்பிக்கப் போகிறார்கள்? என்கிற பரபரப்புடன் கதை நகர்ந்து வருகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television