விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை காண்பதற்கு மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதன்படி ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று தான் ஸ்டார்ட் மியூசிக். இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் வெற்றிகரமாக தொடங்கி நடந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வாரம் தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிகளில் புதிய போட்டியாளர்களை அழைத்து வந்து நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம். அதன்படி இந்த முறை நடிகர் விஜய் ஆண்டனி முதல் முறையாக இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வருகை தந்து உள்ளார். சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக விஜய் ஆண்டனி கலந்துகொள்வது இதுவே முதல் முறை என்பதால் நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. விஜய் ஆண்டனி தொகுப்பாளினி பிரியங்காவை கலாய்த்து எடுப்பது ரசிகர்களிடம் நல்ல சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை காண ஆவலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Embed Video Credits : VIJAY TELEVISION