குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் தர்ஷா குப்தா. இந்த தொடரில் போட்டியாளராக கலந்துகொண்டு கலக்கி இருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பலராலும் அறிந்துகொண்டனர் ஆகினார் தர்ஷா குப்தா.

இவர் 2018ஆம் ஆண்டு ஒளிபரப்பாகிய அவளும் நானும் என்ற தொடரில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகினார். பின்னர் முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே என்ற நாடகத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இவரது சினிமா வாழ்க்கையில் இவருக்கு குக் வித் கோமாளி பெரும் திருப்பு முனையாக அமைந்து இருந்தது. இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெறவில்லை என்றாலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்டார்.

ருத்ரதாண்டவம், ஓ மை கோஸ்ட் போன்ற படங்களிலும் இவர் நடித்து இருந்தார். தற்போது இவருக்கு எதிர்பார்த்த படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் இன்ஸ்டாகிராமில் போட்டோஷூட் செய்து அசத்தி வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படங்களை காண்பதற்கே மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இதனால் ரசிகர்களுக்காக தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் அடிக்கடி ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு சென்று உணவு வழங்கி வருவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். அதன்படி தற்போது இவர் குழந்தைகளை இல்லத்தில் சந்தித்து உணவு வழங்கி மகிழ்ந்து உள்ளார்.

இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். ரசிகர்கள் தர்ஷா குப்தாவை பாராட்டி வருகின்றனர்.