முதல் நாளே முரட்டு வசூல்…! ராயன் செய்த தரமான சம்பவம்..! அச்சத்தில் பிரபல நடிகர்கள்..!

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என சினிமாவில் பல்வேறு முகங்களை கொண்டவர் தான் நடிகர் தனுஷ். 3 படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் உலகளவு வைரலாகியதை தொடர்ந்து மிகப்பெரிய நடிகராக உருவெடுத்து உள்ளார் தனுஷ். தற்போது பாலிவுட் வரை சென்ற தனுஷ் ஒரு படி மேலே சென்று ஹாலிவுட்டிலும் களம் இறங்கி உள்ளார். ஹாலிவுட்டிலும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார் தனுஷ்.

முதல் நாளே முரட்டு வசூல்...! ராயன் செய்த தரமான சம்பவம்..! அச்சத்தில் பிரபல நடிகர்கள்..! 1

விளம்பரம்

இவர் தனது 50வது படமான ராயன் படத்தை இயக்கி நடித்து இருந்தார். சன்பிக்சர் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து உள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. பவர் பாண்டி படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி விட்ட தனுஷ் இப்படத்தினை இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோவம் என்ற படத்தையும் இயக்க உள்ளார்.

முதல் நாளே முரட்டு வசூல்...! ராயன் செய்த தரமான சம்பவம்..! அச்சத்தில் பிரபல நடிகர்கள்..! 3

விளம்பரம்

ராயன் திரைப்படம் நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூ.17 கோடி வசூலை பெற்று உள்ளது. தனுஷ் சினிமா வரலாற்றில் அதிக வசூலை பெற்ற படம் என்றால் அது ராயன் என கூறப்படுகிறது. தனுஷுக்கு கடந்த சில படங்கள் எதிர்பார்த்த வரவேற்பினை பெறாததால், தற்போது இப்படம் அவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்து உள்ளது என்றே கூறலாம்.

விளம்பரம்

Leave a Comment