இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று கதாநாயகனாக தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் இவர். தற்போது கோலிசோடா பட இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்து இருக்கிறார். இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் இவருடன் சரத்குமார், சத்யராஜ் மற்றும் சரண்யா பொன்வண்ணன் நடித்து உள்ளனர். அச்சு ராஜாமணி மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து மழை பிடிக்காத மனிதன் படத்திற்கு இசையமைத்து உள்ளனர். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி உள்ளது. நாளை இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் ஆவலுடன் காத்து இருக்கின்றனர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் மில்டன் இப்படத்தினை இயக்கி இருக்கிறார்.இப்படத்தின் புதிய ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் படத்தின் எதிர்பார்ப்பினை அதிகரித்து இருக்கிறது. படம் வெற்றிபெற ரசிகர்கள் விஜய் ஆண்டனிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Embed Video Credits : TREND MUSIC