நடிகர் பிரஷாந்துக்கு போலீசார் அபராதம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரசாந்த். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. 90களில் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் இவர். பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்து சாக்லேட் பாயாக வலம் வந்தார். பல படங்கள் வெற்றியை கொடுத்தாலும் சில படங்கள் இவருக்கு மிகப்பெரிய தோல்வியை கொடுத்து இருந்தது.

நடிகர் பிரஷாந்துக்கு போலீசார் அபராதம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..! 1

விளம்பரம்

தோல்வி படங்கள் பிரசாந்தின் சினிமா வாழ்க்கையை மாற்றியது. சில வருடங்களாக சினிமாவில் இருந்து நடிகர் பிரசாந்த் விலகினார். தற்போது தளபதி விஜயின் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக அந்தகன் படத்தில் நடித்து உள்ளார்.

நடிகர் பிரஷாந்துக்கு போலீசார் அபராதம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..! 3

விளம்பரம்

இப்படம் நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது, வருகிற 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கும் நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பைக் ஒட்டிக்கொண்டு நடிகர் பிரசாந்த் பேட்டியளித்துள்ளார். அப்பொழுது ஹெல்மெட் போடாமல் இருந்ததால், அவருக்கு போலீசார் 2ஆயிரம் ரூபாய் அபராதமாக விதித்தனர்.

விளம்பரம்

Leave a Comment