விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. நாளுக்கு நாள் தொடரின் சுவாரஸ்யத்தை இயக்குனர் அதிகரித்துக்கொண்டே செல்கிறார். இதனால் இந்த தொடர் பலருக்கும் விருப்பமான தொடராக இருந்து வருகிறது. பல குடும்ப தலைவிகளையும் ரசிகர்களாக கொண்டு வெற்றிநடைபோடுகிறது இந்த தொடர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.ப்ரோமோவில், கிரிஷை பார்க்க முத்து மற்றும் மீனா வருகின்றனர். அங்கு முத்துவின் பிறந்தநாளை கொண்டாடி வரும் ரோகிணி இவர்களை கண்ட உடன் ஓடி ஒளிந்து கொள்கிறார். முத்து மற்றும் மீனா க்ரிஷின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுகின்றனர். பின்னர் ரோகிணி அம்மா, க்ரிஷ் தனது மகளின் பிள்ளை என்பதை கூறுகிறார்.

இதனை கேட்ட ரோகிணி உண்மையை கூறியதால் கடும் அதிர்ச்சி அடைகிறார். மேலும் மீனா முத்துவிடம் ரோகிணியை தத்து எடுத்து கொள்ளலாமா என கேட்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.
Embed Video Credits : VIJAY TELEVISION