அடங்காத அசுரன்தான்…! உலகளவில் ராயன் படத்தின் மொத்த வசூல்..! வெளியான முழு தகவல்..!

நடிகர் தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தை இயக்கி நடித்து உள்ளார். இப்படத்தில் இவருடன் அபர்ணா பாலமுரளி, துஷ்ரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் ஆகியோர் நடித்து உள்ளனர். சன்பிக்ஸர் தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையில் இப்படம் உருவாகி உள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் கடந்த வாரம் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

அடங்காத அசுரன்தான்...! உலகளவில் ராயன் படத்தின் மொத்த வசூல்..! வெளியான முழு தகவல்..! 1

விளம்பரம்

மேலும் ஆஸ்கர் நூலகத்தில் காட்சிப்படுத்த இப்படத்தின் திரைக்கதையும் இடம்பெற்று இருப்பதாக படக்குழு அறிவித்து உள்ளது. தற்போது பல திரையரங்குகளில் ராயன் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. நேற்றும் புதிய படங்கள் வெளியாகிய நிலையில், ராயன் படம் தற்போது நல்ல வரவேற்பினை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

அடங்காத அசுரன்தான்...! உலகளவில் ராயன் படத்தின் மொத்த வசூல்..! வெளியான முழு தகவல்..! 3

விளம்பரம்

தற்போது இப்படம் உலகளவில் 8நாட்கள் முடிவில் 100 கோடி ரூபாய் வசூலை பெற்று உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் இதுவரை அறிக்கை வெளியிடாத நிலையில், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

Leave a Comment