பிக் பாஸ் நிகழ்ச்சிக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம் , தெலுங்கு ,கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு மொழிகளிலும் அங்கு உள்ள முன்னணி நடிகர்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர். அதன்படி தமிழில் நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுவரை 7 சீசன்கள் ஒளிபரப்பாகி இருக்கும் நிலையில் , தற்போது விரைவில் 8வது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது. ரசிகர்கள் ஆவலுடன் இந்த சீசனை காண காத்து இருக்கின்றனர். இந்நிலையில் வருகிற 8வது சீசனை தான் தொகுத்து வழங்கவில்லை என நடிகர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டு உள்ளார். பட வேலைகள் தொடர்ந்து இருப்பதால் இந்த முறை தான் தொகுத்து வழங்கவில்லை என கூறி உள்ளார்.

இது ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்து இருக்கிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதை பார்ப்பதற்கே மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில் , அவரின் இந்த முடிவு நிகழ்ச்சியின் வளர்ச்சியை பின்னுக்கு தள்ளும் விதமாக அமையும் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவருக்கு பதிலாக நடிகர் சிம்பு தொகுத்து வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்றும் உங்கள் நான்.@vijaytelevision pic.twitter.com/q6v0ynDaLr
— Kamal Haasan (@ikamalhaasan) August 6, 2024