தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நானி. தமிழில் இவர் நடிப்பில் வெளியாகிய நான் ஈ படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று இருந்தது. இப்படத்தை தொடர்ந்து இவர் தமிழ் சினிமா ரசிகர்களால் பலராலும் அறியப்பட்டவர் ஆகினார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் வெற்றிப்படங்களை கொடுத்து வரும் நடிகர் நானி, அடிக்கடி தமிழில் படங்கள் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் தற்போது இயக்குனர் விவேக் ஆத்ரியா இயக்கத்தில், சூர்யாவின் சனிக்கிழமை படத்தில் நடித்து உள்ளார். இப்படம் பான் இந்தியா படமாக உருவெடுத்து உள்ளது. இப்படத்தில் வில்லனாக நடிகர் எஸ்ஜே சூர்யா நடித்துள்ளார். நாயகியாக பிரியங்கா மோகன் நடித்து உள்ளார். ஜேக்ஸ் பீஜாய் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. அன்மையில் இவர் நடித்த தசரா படம் மாபெரும் ஹிட் அடித்து இருந்தது. தற்போது இப்படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுக்கும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரைலர் யூடியூபில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
Embed Video Credits : SONY MUSIC INDIA