மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் இருக்கும் நடிகர் மோகன் லால். இவரின் நடிப்பிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே மலையாளத்தில் உள்ளது. மலையாள சினிமாவில் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிலும் இவர் பலரை தனது ரசிகராக கொண்டு இருக்கிறார். தமிழில் இவர் நடித்த ஜில்லா படத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இவர் நடிப்பிற்கு உள்ளது.

மலையாளத்தில் இவர் நடித்து தமிழ் மொழியில் வெளியான சில படங்கள் இவருக்கு ஏமாற்றத்தை கொடுத்தாலும் தொடர்ந்து ஓய்வில்லாமல் படங்கள் நடித்து வருகிறார் மோகன் லால். இந்நிலையில் இன்று இவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த செய்தி இவரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மோகன் லாலை பரிசோதித்த மருத்துவர்களை அவருக்கு தீவிர காய்ச்சல் மற்றும் தசை வலி இருப்பதாக கண்டறிந்துள்ளனர். மேலும் மோகன் லாலுக்கு வைரஸ் தொற்றால் மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளதாகவும், எனவே அவர் ஐந்து நாட்கள் பொது இடங்களுக்கு செல்லாமல் ஓய்வெடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.