இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வாழை படத்தின் ட்ரைலர் வெளியாகியது..!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ். இவரின் இயக்கத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்த இவர் தற்போது முன்னணி இயக்குனராக உருவெடுத்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து கர்ணன் , மாமன்னன் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வாழை படத்தின் ட்ரைலர் வெளியாகியது..! 1

விளம்பரம்

தற்போது இவர் துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தினை இயக்கி வருகிறார். இவருக்கு அடுத்ததாக வாழை படம் வெளியாக உள்ளது . இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் இவருடன் நிகிலா விமல் , கலையரசன், திவ்யா துரைசாமி ஆகியோர் நடித்து உள்ளனர் . இப்படம் வருகிற 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வாழை படத்தின் ட்ரைலர் வெளியாகியது..! 3

விளம்பரம்

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார் . தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

விளம்பரம்

Embed Video Credits : THINK MUSIC INDIA

விளம்பரம்

Leave a Comment