
அமெரிக்க மார்பக புற்றுநோயில் இருந்து தப்பிய சாரா தாமஸ் என்பவர் ஆங்கில கால்வாயை தொடர்ச்சியாக நான்குமுறை நீந்திய முதல் நபராவார்.
கொலராடோவைச் சேர்ந்த 37 வயதான இவர் ஒரு திறந்த நீர் மராத்தான் நீச்சல் வீரராவார். இவர் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸை பிரிக்கும் கால்வாயை நீந்துவதற்கு டோவரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு புறப்பட்டார். கால்வாயின் நான்காவது மடியை (லாப்ஸ்) 54 மணி நேரம் 13 நிமிடங்கள் கழித்து செவ்வாய்க்கிழமை காலை 133 மைல் நீச்சலுக்குப் பிறகு முடித்தார்.
சோர்வடைந்த நீச்சல் வீரர் தண்ணீரிலிருந்து வெளியே வந்தபின் கூழாங்கல் கடற்கரையில் படுத்துக் கொண்டார்.

கொலராடோவில் வசிக்கும் தாமஸ், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அடுத்த மாதங்களில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு முன்பு அவர் பலமுறை நீீீீண்ட தூரம் நீீந்தியுள்ளார். சிகிச்சைக்கு பின் நன்றாக குணமடைந்த அவர் மீண்டும் நீச்சலில் சாதனை படைத்துள்ளார்.
சாரா அவர்கள் முகநூலில் “நான் இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்த நீச்சலுக்காக காத்திருக்கிறேன், இங்கு வருவதற்கு மிகவும் கடினமாக போராடினேன். நான் 100 சதவிகிதம் ஆரோக்கியமாக இல்லை, ஆனால் நான் இப்போது என்னால் முடிந்த அளவு முன்பை விட சிறப்பாக இருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.
மேலும் இந்த நீச்சலை அனைத்து உயிர் பிழைத்தவர்களுக்கும் சமர்ப்பிப்பதாகவும் கூறியுள்ளார்.