தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ். குறைந்த படங்களே தமிழ் சினிமாவில் இயக்கி இருந்தாலும் முன்னணி இயக்குனராக உருவெடுத்து உள்ளார். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவுக்குள் அறிமுகம் ஆகினார். இவர் இயக்கிய மாமன்னன் படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இவர் அடுத்ததாக நடிகர் துருவ் விக்ரம் வைத்து பைசன் படத்தினை இயக்கி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் வாழை. இப்படத்தில் திவ்யா துரைசாமி, நிகிலா விமல் மற்றும் பிரியங்கா நடித்து உள்ளனர். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி உள்ளது. இப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படம் வசூலிலும் விமர்சனத்திலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. தற்போது இப்படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் இயக்குனர் மாரிசெல்வராஜ் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
