ஜனநாயக நாட்டில் இணையதள சேவை முடக்கம்: வாஷிங்டன் இதழ் விமர்சனம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் கடந்த 100 நாட்களாக இணையதள சேவைகள் முடக்கப்பட்டிருக்கிறது என அமெரிக்க இதழான வாஷிங்டன் போஸ்ட் கருத்து தெரிவித்துள்ளது.

ஜனநாயக நாட்டில் இணையதள சேவை முடக்கம்: வாஷிங்டன் இதழ் விமர்சனம் 1

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த அக்டோபர் மாதம் மத்திய அரசு நீக்கியது. இதனால் அப்பகுதியில் கலவரம் ஏற்படாமல் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற காரணத்தை கூறிய மத்திய அரசு கடந்த மூன்று நாட்களாக இணையதள சேவையை முடக்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

விளம்பரம்

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனமான தி வாஷிங்டன் போஸ்ட், “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இணையதள சேவை துண்டிப்பு கடந்த திங்கள்கிழமையோடு 134-ஆவது நாளை எட்டுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் மியான்மர் மற்றும் சீனா போன்ற மிகப்பெரிய சர்வாதிகார நாடுகளில் மட்டுமே நீண்ட நாட்களுக்கு இணையம் தேவையில்லாமல் இருந்தனர்” என இந்தியாவை விமர்சித்துள்ளது

விளம்பரம்

Leave a Comment