புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டக் களமாக மாறி வருகிறது. இந்நிலையில் இச்சட்டத்திற்கு எதிராக காங்கிரசின் ஜெயிரம் ரமேஷ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், அசாமில் ஆளும் பாஜக கூட்டணி கட்சியான அசாம் கன பரிஷித் கட்சி, மக்கள் நீதி மய்யம், திமுக உள்ளிட்ட 60 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

விளம்பரம்
புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் 1

இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே தலைமையிலான நீதிபதி பி.ஆர்.காவாய் மற்றும் நீதிபதி சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

மத்திய அரசின் சார்பாக தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் ஆஜரானார். ஆனால் நீண்டநேரம் இதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது என கூறிய தலைமை நீதிபதி, இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் ஜனவரி மாதத்திற்கு இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment