முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தான் செல்வராகவன். இவரின் திரைக்கதை மற்றும் இயக்கத்திற்கென என்று ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தனுஷை வைத்து இவர் இயக்கிய புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை என்றாலும் தற்போது ரசிகர்கள் இதுபோன்று படம் உண்டா என இப்படங்களை தலையில் தூக்கி வைத்து ஆடி வருகின்றனர். அந்தளவிற்கு இவரது படங்கள் தற்போதைய ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் இயக்குனர் என்பதை தாண்டி தற்போது நடிகராக மாறிவிட்டார். தொடர்ந்து சாணிக்காயிதம் , பீஸ்ட், ராயன் என படங்களில் நடித்து நடிகராக அசத்தி வருகிறார் செல்வராகவன். இவர் அடுத்ததாக தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார். இறுதியாக இவர் தனுஷை வைத்து இயக்கிய நானே வருவேன் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

தற்போது இவர் தியானம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசி வீடியோ வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது. ரசிகர்கள் செல்வராகவனின் கருத்துக்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram