தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் நடிகராக அசத்தி வருபவர் சுந்தர் சி. இவரின் இயக்கங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. பல வெற்றிப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து உள்ளார். சூப்பர் ஸ்டாரை வைத்து இவர் இயக்கிய அருணாச்சலம் இன்று வரை ரசிகர்களுக்கு விருப்பமான படமாக அமைந்து இருக்கிறது.மேலும் இவர் இயக்கத்தில் வெளியான வின்னர் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து உள்ளது.

தற்போது இவர் 15ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் வடிவேலு உடன் இணைந்து நடித்துள்ளார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான தலைநகரம் மற்றும் நகரம் போன்ற படங்கள் மாபெரும் ஹிட் அடித்து உள்ளது.இதனை தொடர்ந்து தற்போது கேங்கர்ஸ் என்ற படத்தில் இணைந்து நடித்து உள்ளனர். நடிகர் வடிவேலுவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி உள்ளது.

போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. மேலும் படத்தின் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் புகைப்படங்களை கொண்டாடி வருகின்றனர்.
