விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த தொடருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. முன்னணி ஹிட் தொடர்கள் வரிசையில் சிறகடிக்க ஆசை தொடரும் இணைந்து கலக்கி வருகிறது. நாளுக்கு நாள் தொடரின் சுவாரசியம் அதிகரித்து வருவதால் ரசிகர்கள் கூட்டமும் இந்த தொடருக்கு அதிகரித்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில்,நண்பன் தந்தையின் 60வது கல்யாணத்திற்காக முத்து பணம் தருவதாக வாக்கு கொடுக்கிறார். இதனால் வீட்டில் வந்து வீடு கட்ட வைத்திருந்த பணத்தை மீனாவிடம் கேட்கிறார். இதற்கு மீனா பணத்தை கொடுத்துவிட்டால் வீடு எப்படி கட்டுவது என கேள்வி கேட்கிறார். அதெல்லாம் தெரியாது பணம் வேண்டும் என முத்து சண்டையிடுகிறார்.

முடியாது என கூறிய மீனாவிடம் முத்து கோவத்தில் சத்தம் போடுகிறார். இதனை கண்டு மீனா அதிர்ச்சி அடைகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மீனாவின் மேல் முத்து கோவப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Embed Video Credits : VIJAY TELEVISION